< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மது போதையில் காரில் அதிவேகம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..சேலம் அருகே சோகம்
|16 Feb 2024 6:44 PM IST
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்கள் காரை மதுபோதையில் ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
சேலம்,
சேலத்தில் இருந்த கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த கார், சேலம் பனமரத்து பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. இந்த கோர விபத்தில், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மாணவர்களான கௌதம் (வயது 21) மற்றும் காம்கோ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சரண் என்ற மாணவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரியில் உள்ள காம்கோ வீட்டிற்கு மாணவர்கள் சென்றதும், காரை மாணவர்கள் மதுபோதையில் இயக்கியதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.