கரூர்
வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனை
|அரவக்குறிச்சியில் வரத்து குறைவால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.
முருங்கைக்காய் சாகுபடி
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈசநத்தம், ஆத்துமேடு, கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, வெஞ்சமாங்கூடலூர், தடாகோவில், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னாக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை முருங்கைக்காய் சீசன் ஆகும். இந்த சமயத்தில் முருங்கைக்காய்கள் அதிகளவில் காய்க்கும். தற்போது முருங்கை சீசன் குறைந்து காய்கள் வரத்து குறைவாக உள்ளன.
கிலோ ரூ.60-க்கு விற்பனை
அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், இந்திரா நகர், ஆத்துமேடு, ஈசநத்தம், பள்ளப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதியிலுள்ள முருங்கைக்காய் மார்க்கெட்டில் வியாபாரிகள் முருங்கைக்காயை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது வரத்து குறைவாக உள்ளதால் முருங்கைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.