< Back
மாநில செய்திகள்
அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்தது
கரூர்
மாநில செய்திகள்

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்தது

தினத்தந்தி
|
25 Sep 2023 5:38 PM GMT

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்ததால் கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து குறைவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் போன்ற கால் நடைகளை வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது.

முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன. கடந்த மாதங்களில் முருங்கைக்காய்விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.5-க்கு, ரூ.15-க்கு விலைபோனது. தற்போது முருங்கைக்காய் விைளச்சலும், வரத்தும் குறைந்து உள்ளதால் 1 கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போகிறது.

கமிஷன் மண்டிகளில்...

ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்றுவிடுவார்கள்.

அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களுரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. தற்போது அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் முருங்கைக்காய் வரத்து படிப்படியாக குறையும். இதனால் ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்