< Back
மாநில செய்திகள்
முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.100-க்கு விற்பனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முருங்கைக்காய் விலை 'கிடுகிடு' உயர்வு; கிலோ ரூ.100-க்கு விற்பனை

தினத்தந்தி
|
3 Dec 2022 12:20 AM IST

புதுக்கோட்டையில் முருங்கைக்காய் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்தது. கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது.

முருங்கைக்காய்

புதுக்கோட்டையில் உழவர்சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருங்கைக்காய் விலை ரூ.70 வரைக்கு விற்பனையானது. முருங்கைக்காய் சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது மழையினால் முருங்கைப்பூ பூக்காமல் உதிர்ந்துவிடுவதால் விளைச்சல் குறைந்துள்ளது. அதனால் சந்தைக்கு வரத்தும் குறைந்தது. சீசன் தொடங்கியதும் வரத்து அதிகரித்து விலை குறையும் என்றனர்.

குடை மிளகாய் ரூ.80-க்கு விற்பனை

புதுக்கோட்டை உழவர்சந்தையில் விற்பனையான காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- கத்தரிக்காய் ரூ.45-க்கும், தக்காளி ரூ.18-க்கும், வெண்டைக்காய் ரூ.14-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், கேரட் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், பச்சை மிளகாய் ரூ.35-க்கும், குடை மிளகாய் ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.16-க்கும், கருணைகிழங்கு ரூ.25-க்கும் விற்பனையானது.

மேலும் செய்திகள்