புதுக்கோட்டையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
|போதைப்பொருட்கள், படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், அதிகாரிகள் இதனை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 874 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 110 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக சுல்தான் என்பவரை தேடி வருகின்றனர்.
இந்த போதைப்பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், இதனை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.