< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Jun 2024 10:43 AM IST

கென்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நைஜீரியா நாட்டில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோகாவில் இருந்து சென்னை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கென்யாவில் இருந்து வந்த இளம்பெண், கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணிடம் இருந்து 2.2 கிலோ கொக்கென் என்ற போதைப்பொருளை கைப்பற்றினர்.

மேலும் அப்பெண்ணை கைது செய்த அதிகாரிகள், சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருளை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்