< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|28 Jun 2024 5:03 PM IST
சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பெண் பயணி ஒருவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அந்த பெண்ணின் கைப்பை மற்றும் காலணியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.