< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
|16 Dec 2023 12:47 AM IST
பயணி ஒருவர் மிகச்சிறிய பண்டல்களில் போதைப்பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சென்னை,
எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி மிகச்சிறிய பண்டல்களில் போதைப்பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்த பயணியிடம் இருந்து மொத்தம் 1,201 கிராம் எடை கொண்ட ரூ.12 கோடி மதிப்பிலான கொக்கேய்ன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணி நைஜீரியா நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.