< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்
|24 April 2024 8:09 AM IST
சென்னை விமான நிலையத்தில் 11 கிலோ எடையுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள ஹெராயின் வகை போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரிய வந்துள்ளது.