< Back
மாநில செய்திகள்
1,300 கிலோ எடையுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு
மாநில செய்திகள்

1,300 கிலோ எடையுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு

தினத்தந்தி
|
26 Jun 2023 12:22 PM IST

1,300 கிலோ எடையுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரின் 'போதை இல்லா தமிழகம்' என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ எடையுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு தென்மேல்பாக்கத்தில், மருத்துவ கழிவுகளை அழிக்கும் இடத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது.

இந்தாண்டில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் போதைப் பொருள் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்