< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரும் கைது
மாநில செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் சகோதரரும் கைது

தினத்தந்தி
|
13 Aug 2024 8:45 PM IST

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறை அவர் மீது தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து ஜூன் 26-ந் தேதி கைது செய்தது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, அவர் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணைக்கு பின் அவரை அமலாகத்துறை கைது செய்தது.இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு முகமது சலீமை நேரில் ஆஜர்படுத்தினர். முகமது சலீமை 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்