போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போலீசார் சம்மன்
|சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.