< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போதை மருந்து விற்பனை: மேலும் ஒருவர் கைது
|27 Aug 2022 10:07 PM IST
சின்னமனூரில் போதை மருந்து விற்பனையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
சின்னமனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி மருந்து விற்பனை தொடர்பாக திருச்சியை சேர்ந்த ஜோனத்தன் மார்க் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் நேற்று நிஷாந்த் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் காரைக்குடியை சேர்ந்த ராஜா முகமது (வயது 22) என்பருக்கும் போதை மருந்து வாங்கி விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.