நீலகிரி
போதைப்பொருள் தடுப்பு முகாம்
|பந்தலூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு முகாம் நடைபெற்றது.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது, போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் இளம் தலைமுறையினர் விரைவில் அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர். எனவே வளரும் பருவத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. மாணவ பருவத்தில் எளிதில் கெட்ட பழக்கங்கள் தொற்றி கொள்ளும். இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் உயரும் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார். பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், மாதவன் ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.