< Back
மாநில செய்திகள்
போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேலூர்
மாநில செய்திகள்

போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினத்தந்தி
|
14 Oct 2023 11:28 PM IST

லத்தேரி அடுத்த செஞ்சியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த செஞ்சி ஊராட்சியை புகையிலை பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கான முதல் கட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புகையிலை, போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி வேலூர் மாவட்ட போதை மற்றும் புகையிலை தடுப்பு மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீ பேசினார். போதைப்பொருள் தடை சட்டங்கள் பற்றி வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் உதவியாளர் பாலசுந்தரம் பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் செய்திகள்