தென்காசி
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
|பாவூர்சத்திரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் த.பி.சொ. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டேவிட் ஸ்டீபன் மற்றும் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பாவூர்சத்திரம் பஸ்நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்,போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதியை ஏற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் ரமேஷ், ஆலோசகர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் துரைசங்கர் யோகலிங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட உதவியாளர் கோபாலகிருஷ்ணன், வெற்றி கருப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.