ராணிப்பேட்டை
பயணிகள், மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு
|அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகள், மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஸ்மான் செரிப் தலைமையிலான போலீசார் ரெயில் நிலையம் முன்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு போதை வேண்டாம் என்ற போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களிடையே ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்மி பேசிய போது மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம், படிக்கும் வயதில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ரெயில் பயணிகள் போதை வேண்டாம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ரெயில் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.