< Back
மாநில செய்திகள்
போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:41 AM IST

மூலைக்கரைப்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். நாங்குநேரி வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சி.பேச்சிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.குமார் ஆகியோர் பேசினார்கள். நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் ஆவுடையப்பன் நன்றி கூறினார். பின்னர் மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலும் செய்திகள்