< Back
மாநில செய்திகள்
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
தேனி
மாநில செய்திகள்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
24 Jun 2023 12:30 AM IST

கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கம்பம் வடக்கு போலீஸ்நிலையம் சார்பில் போதைப் பொருள்கள் தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஓவிய போட்டிகள் கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கலந்து கொண்டு பேசுகையில், பள்ளிப் பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் விற்பது குறித்தும், பள்ளியில் மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது குறித்த தகவலை ஆசிரியர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்