< Back
மாநில செய்திகள்
மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் இல்ல திருமண விழா
அரியலூர்
மாநில செய்திகள்

மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் இல்ல திருமண விழா

தினத்தந்தி
|
25 April 2023 12:20 AM IST

மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் இல்ல திருமண விழா நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜெய்மாருதி பார்மஸி, ஆண்டிமடம் மாருதி மெடிக்கல்ஸ் உரிமையாளரும், அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவரும், ஆண்டிமடம் இம்ப்ரெஸ் லயன்ஸ் சங்க தலைவருமான கருணாகரன்- மலர்விழி தம்பதியரின் மகள் காவ்யா என்பவருக்கும், சிலம்பூர் வடக்கு திருகோணம் ஓய்வு பெற்ற வனத்துறை ஜெயக்குமார்- காமாட்சி தம்பதியரின் மகனும், இடையக்குறிச்சி அரசு மருத்துவருமான சுதாகர் என்பவருக்கும் ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் சாலை கவரப்பாளையத்தில் உள்ள பெரியார் அண்ணா அரங்க திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், மணமக்களை வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சியும், செண்டை மேள கச்சேரியும் என வெகு விமர்சையாக திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் மனோகரன், அரியலூர் மாவட்ட மருந்து ஆய்வாளர் தேவி மற்றும் மருந்து வணிகர்கள் சங்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் மணமகன், மணமகள் உற்றார் உறவினர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்