தென்காசி
போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
|சுரண்டை காமராஜர் கலைக்கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
சுரண்டை:
சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 201 மற்றும் என்.வி.எஸ். காமராஜர் அறக்கட்டளை இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். பேராசிரியர் வீரபத்திரன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சுரண்டை வேலாயுத நாடார் சன்ஸ் நிர்வாக பங்குதாரர் எஸ்.வி.ஜி.வெற்றிவேல், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து, சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.அருள்ஜோதி, டாக்டர் எஸ்.கே.ஆர்.குமரேச பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது குறித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் என்.வி.எஸ். காமராஜர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், எஸ்.முருகன், கே.டி.பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.