திருநெல்வேலி
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
|வடக்கன்குளத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வடக்கன்குளம்:
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. சகாயத்தாய் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது வடக்கன்குளம் ரதவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று அதிசய விநாயகர் கோவிலில் நிறைவு பெற்றது. பேரணியில் மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். கல்லூரி முதல்வர் சுஜாதா மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளையும், ஆசிரியர்களையும் எஸ்.ஏ.வி. குழும தலைவர் கிரகாம்பெல், பாலகிருஷ்ணா பள்ளி தாளாளர் திவாகரன் ஆகியோர் பாராட்டினர். பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.