அரியலூர்
மாணவர்களுக்கு, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
|மாணவர்களுக்கு, போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் தனியார் மறுவாழ்வு மையம் ஆகியவற்றின் சார்பில் அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரஜோதி மாணவ-மாணவிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும், அவற்றில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்தும் விளக்கி பேசினார். மேலும் அவர் போதை பொருட்கள் குறித்து 9489646744 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்றார். போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.