< Back
மாநில செய்திகள்
திருத்துறையூர், பெண்ணாடம் அரசு பள்ளியில்  போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கடலூர்
மாநில செய்திகள்

திருத்துறையூர், பெண்ணாடம் அரசு பள்ளியில் போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தினத்தந்தி
|
8 Aug 2022 9:38 PM IST

திருத்துறையூர், பெண்ணாடம் அரசு பள்ளியில் போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


புதுப்பேட்டை,


புதுப்பேட்டை அருகே திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கஞ்சா மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

மேலும் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சீனிவாசன், தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

இதேபோல், பெண்ணாடம் போலீசார் சார்பில், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கஞ்சா மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்