< Back
மாநில செய்திகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 Aug 2022 10:31 PM IST

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சாயல்குடி,

கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மன நலத்திட்டம் சார்பில் கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாண்டிமா தேவி தலைமை தாங்கினார். பேராசிரியர் பெனாசீர் லைலா கலித், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மனநல மருத்துவர்கள் டாக்டர் அஷ்ரப் அலி, டாக்டர் பரத் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். மாவட்ட மனநல திட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவினாஷ் போதை விழிப் புணர்வு குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்