திருப்பூர்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பரிதாப சாவு
|அவினாசி அருகே தண்ணீர்தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
அவினாசி
அவினாசி அருகே தண்ணீர்தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஒர்க்்ஷாப் உரிமையாளர்
நெல்லை மாவட்டம் கமுகுமலை பகுதியை சேர்ந்தவர் முத்துப்பழனி, (வயது 34). இவரது மனைவி முத்துராம் (29). இவர்களுக்கு அஸ்வின் (13), ஜேஸ்மிதா(3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரை ஊராட்சி பச்சாம்பாளையம் ராஜீவ் காந்திநகரில் குடும்பத்்துடன் வசித்து வந்தனர்.
முத்துப்பழனி பழங்கரை பகுதியில் இருசக்கர வாகன ஒர்க்்ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகன் அஸ்வின் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நீரில் மூழ்கி பலி
இந்த நிலையில் நேற்று பிற்பகல் வீட்டின் முன்பு சிறுமி ஜேஸ்மிதா மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். வெளியில் விளையாட சென்ற குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் குழந்தையை அப்பகுதியில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள மூடப்படாத திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.