< Back
மாநில செய்திகள்
முருங்கைக்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முருங்கைக்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

தினத்தந்தி
|
2 July 2022 1:20 AM IST

வடகாடு பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் முருங்கை மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். நன்கு விளைந்து நிற்கும் முருங்கைக்காய்களை பறித்து கமிஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்வது வழக்கம். தற்போது 100 முருங்கைக்காய்கள் கொண்ட கட்டு ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த இருமாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் முருங்கைக்காய் ஒன்று 30 காசுக்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் முருங்கைக்காய்கள் வீணாகி குப்பைகளில் கொட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்