ஜி.20 மாநாட்டையொட்டி சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
|ஜி.20 மாநாட்டையொட்டி சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் நாளை (31.1.2023)முதல் வரும் பிப்ரவரி 2-ந் தேதி வரை 3 நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இது தொடர்பான நிகழ்ச்சிகள் மகாபலிபுரத்திலும் நட க்கிறது.
இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின்பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.இந்த பிரதிநிதிகள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல்,தாஜ் கன்னிமாரா,ஹயாத்,தாஜ் கிளப்ஹவுஸ் ஆகிய ஓட்டல்களில் தங்குகிறார்கள்.ஐ.ஐ.டி.ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்கள்.
எனவே மேற் கூறப்பட்ட சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும்,மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்ப டுகிறது.இந்த எல்லைப்பகுதியில் மேற்கூறப்பட்ட 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதி க்கப்பட்டுள்ளது.இந்த தகவல் சென்னை போலீசார் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.