பெரம்பலூர்
தொழிலாளர் உதவி ஆணையரிடம் டிரைவர்கள் மனு
|தொழிலாளர் உதவி ஆணையரிடம் டிரைவர்கள் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தியைசந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழில்சாலைகளுக்கு இயக்கப்பட்டு வரும் கனரக வாகனங்களுக்கு, அதன் நிறுவனங்கள் கட்டாயம் தொழிற்சங்கத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆராய்ந்து அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதே போல் தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநர்கள் நல சங்கம், தமிழ்நாடு கனரக வாகனங்கள் ஓட்டுநர்கள் நல சங்கம், அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்கம், எவரெஸ்ட் அனைத்து வாகன ஓட்டுநர் வாழ்வுரிமை சங்கம் ஆகியவை இணைந்து தொழிலாளர் உதவி ஆணையரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலைக்கு தினமும் எங்கள் கனரக வாகன டிரைவர்கள்அடிப்படை வசதிகளான ஓய்வறை, உணவகம் மற்றும் கழிவறை போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பின்பு சரக்கு ஏற்றுவதற்கு நிறுவனத்திற்கு உள்ளே சென்றால் ஒரு டிரைவர் மட்டும் அனுமதிக்கிறார்கள். அதை மாற்றி 2 நபர்களாக டிரைவர்-கிளீனரை அனுமதிக்க வேண்டும். லோடு ஏற்றி செல்லும் வாகனத்திற்கு விரைவில் லோடு ஏற்றவும், இறக்கவும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.