< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
|28 Feb 2024 5:48 PM IST
எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
இன்று முதல் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை இயக்கிக்காட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.
எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது . தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திரும்ப வந்துவிடும் எனவும் சரியான முகவரியுடைய தபால் உறையை விண்ணப்பத்தாரர்கள் தந்த பின்னர் ஓட்டுநர் உரிமம் தபாலில் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. .
அதேபோல் ஆர்.சி.புத்தகத்தையும் பதிவுத் தபால் மூலமாகவே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.