< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
சேலம், தர்மபுரியில் விபத்தை ஏற்படுத்திய 175 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
|14 Jun 2023 1:37 AM IST
சேலம், தர்மபுரியில் விபத்தை ஏற்படுத்திய 175 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சேலம்
வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி அவ்வப்போது வாகன சோதனை நடத்தி உரிமம் இல்லாமல் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே போன்று விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பு ஏற்படுத்தும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வருகின்றனர். அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை விபத்துகளை ஏற்படுத்தி உயிர் இழப்பு ஏற்படுத்திய சேலம், தர்மபுரியை சேர்ந்த 175 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதே போன்று உரிமம் இல்லாமல் இயங்கிய 160 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.