செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே டிரைவர் வெட்டிக்கொலை
|செங்கல்பட்டு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொலை
செங்கல்பட்டை அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர்.
டிரைவர்
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சோழிங்கநல்லூரை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பவரது மகன் அர்ஜூன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருவதும், சவாரிக்காக அழைத்து வந்த மர்மநபர்கள் அர்ஜுனை கொலை செய்து விட்டு காரை திருடி சென்றதும் தெரியவந்தது. கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.