< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போலீசார் தாக்கியதில் டிரைவர் உயிரிழந்த விவகாரம் - தலைமை காவலர் கைது
|23 March 2024 5:21 PM IST
போலீசார் தாக்கியதில் கால் டாக்சி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதில் கார் டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, கால் டாக்சி டிரைவரான ராஜ்குமார் வானகரம் சர்வீஸ் சாலையில், பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இது தொடர்பாக அவரை மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வான் விசாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் டிரைவர் ராஜ்குமாரை தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது.
டிரைவர் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் காவலர் ரிஸ்வான் தாக்கியதில் டிரைவர் ராஜ்குமார் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமை காவலர் ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார்.