< Back
தமிழக செய்திகள்
கார் மோதி டிரைவர் சாவு
சிவகங்கை
தமிழக செய்திகள்

கார் மோதி டிரைவர் சாவு

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

கார் மோதி டிரைவர் உயிரிழந்தார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள டி.பாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). ஜே.சி.பி. டிரைவரான இவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் மானாமதுரை சென்று விட்டு நான்கு வழிச்சாலையில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தினேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அருமைநாதன் (35) மீது திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்