< Back
மாநில செய்திகள்
பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி; 30 பேர் காயம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி; 30 பேர் காயம்

தினத்தந்தி
|
13 March 2023 12:51 PM IST

பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர்.

லாரி- பஸ் மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 56). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் கல்பாக்கத்தில் இருந்து டிரைவர் கார்த்திகேயன் பஸ்சை ஓட்டி வந்தார். மனாலிநத்தம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டிப்பர் லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

டிரைவர் சாவு

இதில் லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதில் லாரி டிரைவருக்கு காலில் எலும்பு முறிந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பறிதாபமாக உயிரிழந்தார்.

லாரி டிரைவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ேமலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்