< Back
தமிழக செய்திகள்

திருவண்ணாமலை
தமிழக செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலி

16 Sept 2023 10:36 PM IST
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார்.
ஆரணி
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார்.
களம்பூரை அடுத்த சென்னானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (வயது 33). இவர் வாடகை ஆட்டோ டிரைவராவார்.
நேற்று முன்தினம் இரவு ஆரணியிலிருந்து சென்னானந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோவுடன் வந்து கொண்டிருந்தார்,
பெருமாள் என்பவரின் நிலத்திற்கு அருகில் ரோட்டின் வளைவில் திரும்பும் போது ஆட்டோ திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்
இது குறித்து களம்பூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முருகனுக்கு காவியா என்ற மனைவியும் 1மாதமான ஆண் குழந்தையும் உள்ளனர்.