திருவள்ளூர்
மது அருந்துவதை மனைவி தட்டிக்கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
|மது அருந்துவதை மனைவி தட்டிக்கேட்டதால் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 46) ). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும் பூர்ணிமா, சுகன்யா என்ற இரு மகள்களும் உள்ளனர். பாபு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததாக தெரிகிறது. எனவே லட்சுமி ஏன் இவ்வாறு குடித்து உடலை கெடுத்து கொள்கிறீர்கள் என தட்டி கேட்டார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு நேற்று முன்தினம் இரவு தன் அறைக்குச் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நடந்த சம்பவம் குறித்து லட்சுமி மணவாளநகர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.