< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி

தினத்தந்தி
|
11 May 2023 2:00 PM IST

மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.

காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). டிரைவராக பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு இவர் செங்கல்பட்டில் பணி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நத்தாநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.

பழைய சீவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது சப்-இன்ஸ்பெக்டர் கிரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்