கன்னியாகுமரி
அரசு பஸ் மோதி டிரைவர் பலி
|அருமனை அருகே அரசு பஸ் மோதி டெம்போ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அருமனை:
அருமனை அருகே அரசு பஸ் மோதி டெம்போ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
டெம்போ டிரைவர்
அருமனை அருகே உள்ள மாங்கோடு வெள்ளச்சிப்பாறையை சேர்ந்தவர் ஷிபு (வயது 44). இவர் மாங்கோடு பகுதியில் ஒரு ஹாலோ பிரிக்ஸ் நிறுவனத்தில் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சிபு வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து குளப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாச்சிப்பாறையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ஷிபு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட ஷிபு அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஷிபுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான ஷிபுவுக்கு ஷீனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.