< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
7 Oct 2024 8:56 AM IST

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த மகிளடி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் மகன் நாகார்ஜுன் (வயது 23). இவர் சென்னையில் தங்கி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நாகார்ஜுன் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த ரெயில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர்- கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சென்றபோது, அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகார்ஜுனின் உடலை கைப்பற்றி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்