< Back
மாநில செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

தினத்தந்தி
|
7 July 2022 11:10 PM IST

அரூர் அருகே மான் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.

அரூர்

அரூர் அருகே உள்ள செக்காம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரையன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் வாடகைக்கு ஆண்டிப்பட்டி புதூருக்கு சென்றுவிட்டு மீண்டும் அரூருக்கு வந்து கொண்டு இருந்தார். ஆண்டிப்பட்டி காப்புக்காடு அருகே வந்தபோது வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று குறுக்கே வந்தது. அப்போது டிரைவர் பிரேக் போட்டபோது நிலைதடுமாறி மான் மீது மோதிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில் டிரைவர் சுந்தரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மானும் செத்தது. இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்