< Back
மாநில செய்திகள்
டிரைவர் சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

டிரைவர் சாவு

தினத்தந்தி
|
30 Sep 2023 7:00 PM GMT

உடன்குடியில் பகுதியில் டிரைவர் இறந்து கிடந்தார்.

உடன்குடி:

உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 62). இவர் பல்வேறு வாகனங்களை வாடகைக்கு ஓட்டும் டிரைவர் ஆவார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

உடன்குடி பஸ் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ராஜகுமார் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து சென்று ராஜகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் ராஜகுமார் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்