< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

வளையப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

மோகனூர்

லாரி டிரைவர்

எருமப்பட்டி அருகே உள்ள பீம நாயக்கனூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). லாரி டிரைவர். இவரது மனைவி குப்பம்மாள் (40). கடந்த மாதம் 28-ந் தேதி மாலை வெங்கடேஷ் தனது உறவினரை அழைத்துகொண்டு வளையப்பட்டிக்கு சென்று சென்னை செல்வதற்காக பஸ் ஏற்றி அனுப்பி விட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வளையப்பட்டியில் இருந்து தூசூர் செல்லும் சாலையில் குரும்பப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இந்தநிலையில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சையில் இருந்த அவரை, மேல்சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வெங்கடேஷ் இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மனைவி குப்பம்மாள் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்