< Back
மாநில செய்திகள்
நரிக்குடி அருகே தூக்குப்போட்டு டிரைவர்  தற்கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

நரிக்குடி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தினத்தந்தி
|
12 Oct 2023 1:57 AM IST

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.


நரிக்குடி அருகே உழுத்திமடை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன் (வயது 36). டிரைவரான இவர் அ.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து அ.முக்குளம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரபாகரன் மாமியார் வீட்டில் இருந்த தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்ததாகவும், பிரியா காலையில் வருவதாகவும் கூறியுள்ளார்.இதனால் பிரபாகரன் அங்கிருந்து தான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் பிரியா வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அ.முக்குளம் போலீசார் விரைந்து வந்து பிரபாகரனின் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்