< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை
மாநில செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் டிரைவர் தற்கொலை

தினத்தந்தி
|
9 July 2024 7:02 PM IST

இளம்பெண்ணுக்கும் டிரைவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா (வயது 27). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சூர்யாவிற்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சூர்யா சென்றார். அப்போது அவருக்கும் அந்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சூர்யா அந்த பெண் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்