< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
|22 May 2022 3:39 AM IST
திருமணம் செய்வதாக மாணவியை ஏமாற்றிய டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே காத்தப்புரம் அரிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுமேஷ் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் 17 வயதான கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுமேஷை கைது செய்தனர்.