< Back
தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை
தமிழக செய்திகள்
பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற டிரைவர் கைது

11 Jun 2022 8:14 PM IST
ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்த வேனில் சென்ற 14 வயது மாணவியிடம் தயாளன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தயாளனை கைது செய்தனர்.