திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
|திருவள்ளூர் அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர் (வயது 38). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே கம்பெனியில் வேலை செய்து வந்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண்ணிடம் எபிநேசர் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை எபிநேசர் மறைத்து இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை அந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து 8 மாதம் கர்ப்பமான அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்ய எபினேசரிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்யாமல் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாக கூறி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து எபிநேசரை கைது செய்தார்.