< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு  கேரளாவை சேர்ந்தவர்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு கேரளாவை சேர்ந்தவர்

தினத்தந்தி
|
2 Sep 2022 5:43 PM GMT

நாமக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் இறந்தார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் இறந்தார்.

லாரி டிரைவர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள காந்தலூரை சேர்ந்தவர் ராஜீவ். இவருடைய மகன் ரத்தீஸ் (வயது 30). லாரி டிரைவர். இதனிடையே நாமக்கல் பட்டறை மேட்டில் உள்ள பெருமாள் என்பவருடைய பட்டறையில் கோட்டயத்தை சேர்ந்த சனோஜ் என்பவரின் புதிய லாரிக்கு பாடி கட்டும் பணி நடந்து வந்தது.

அங்கிருந்து லாரியை எடுத்து வருமாறு, ரத்தீசுக்கு லாரியின் உரிமையாளர் சனோஜ் கூறி உள்ளார். அதற்காக நேற்று முன்தினம் நாமக்கல்லுக்கு வந்த ரத்தீஸ், பட்டறையில் லாரி பாடி கட்டும் பணி நடந்து வருவதை பார்வையிட்டு உள்ளார்.

விசாரணை

பின்னர் மாலை பட்டறை மேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் இரவு 11 மணி அளவில் 2-வது மாடியில் இருந்து ரத்தீஸ் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கும் விடுதி நிர்வாகத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ரத்தீசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்