< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஏரியூர் அருகேமின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு
|15 Sept 2023 12:30 AM IST
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி ராமகொட்டபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவருடைய மகன் முனுசாமி (வயது 23). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று காலை தனது வீட்டில் சலவைபெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்தார். உடனடியாக பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் முனுசாமியை மீட்டு ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.